ஸ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து: 9 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்பு…

21 August 2020, 9:47 pm
Quick Share

தெலுங்கானா: ஸ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மின் உற்பத்தி பிரிவில் சிக்கிக் கொண்ட பொறியாளர்கள் 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தின் போது 19 பேர் அங்கு பணியில் இருந்தனர். அவர்களில் 10 பேர் சுரங்கப்பாதை வழியாக வெளியேறி உயிர் தப்பினர். 9 பேர் தீ விபத்திற்கு உள்ளான நிலத்தடியில் இருக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக தீ விபத்து நடைபெற்ற சமயத்தில் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

எனவே சுரங்கங்களில் சிக்கி கொள்பவர்களை மீட்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களான சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் ஸ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இன்று மதியம் முதல் மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிக்கு பின் அங்கு சிக்கிக்கொண்ட 9 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் கருகிய நிலையில் மீட்டனர். கூடுதல் பொறியாளர் சீனிவாஸ், உதவி பொறியாளர்கள் வெங்கடராவ், மோகன் குமார், உஜ்மா பாத்திமா, சுந்தர் ஆகியோர் மற்றும் உதவியாளர்கள் ராம்பாபு,கிரண், தனியார் பேட்டரி நிறுவன ஊழியர்கள் மகேஷ்குமார், வினோத்குமார் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

Views: - 27

0

0