மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீவிபத்து: 13 நோயாளிகள் உயிரிழப்பு..!!

23 April 2021, 8:13 am
mumbai fire hospital - updatenews360
Quick Share

மும்பை: மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு இல்லாத நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், தீயணைப்புத்துறையினர் மூலம் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, வாசையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளில் 13 பேர் தீவிபத்து காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாசை விரார் நகராட்சி ஆணையம் இந்த தகவலை வெளியிட்டதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஒருபுறம் இருக்கையில், இதுபோன்ற அசாம்பாவிதங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 398

0

0