குஜராத் மாநிலத்தில் ரசாயன ஆலையில் தீ விபத்து…! பல அடி உயரத்துக்கு எரிந்த தீ ஜூவாலை
8 August 2020, 8:20 pmஅகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
அம்மாநிலத்தின் வலசாத் மாவட்டத்திலுள்ள வபி என்ற நகரம் இருக்கிறது. அங்குள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள் 8 வாகனங்களில் விரைந்து சென்றனர்.
கொளுந்துவிட்டு எரிந்து ஆலைக்குள் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்துக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பல அடி உயரத்துக்கு கரும் புகை வெளியேறியதை கண்ட மக்கள் பதறி ஓடினர். இடைவிடாமல் புகை வெளியேறி கொண்டிருந்ததால் அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி தந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.
ஆலையில் எப்படி தீப்பிடித்தது? எத்தனை பேர் பணியில் இருந்தனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. மின்கசிவு காரணம் என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சேத மதிப்பு குறித்த விவரங்கள் இன்னமும் கணக்கிடப்படவில்லை என்று ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல இந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பின்னரே முழு விவரங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.