பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு: ஜம்முவில் பதற்றம்..!!

Author: Aarthi Sivakumar
8 December 2021, 8:48 am
Quick Share

ஜம்மு-காஷ்மீர்: ஜம்முவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சோபியன் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதனால், அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து கொண்டிருப்பதாகவும் பயங்கரவாதிகளின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை, காயம் அடைந்தவர்கள் நிலவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Views: - 217

0

0