துணை முதல்வரான பின்பு முதல் பிறந்தநாள்… பவன் கல்யாணுக்காக பள்ளியில் உற்சாக கொண்டாட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2024, 4:24 pm

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு இன்று 57வது பிறந்தநாள். பிறந்த நாளை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடித்து பெரும் வெற்றி அடைந்த கப்பர் சிங் திரைப்படம் ஆந்திரா முழுவதும் இன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

தங்களுடைய அபிமான தலைவர், நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு ஜனசேனா கட்சி தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் ஆகியோர் மாநிலம் முழுவதும் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

சித்தூர் மாவட்டம் குப்பம் நகரில் மாணவ மாணவிகள் மைதானம் ஒன்றில் அமர்ந்து பவன் கல்யாண் உருவத்தை ஏற்படுத்தினர்.

  • Archana and Arun love story காதலர் தினத்தில் ஆட்டம் போட்ட பிக் பாஸ் அர்ச்சனா…வைரலாகும் வீடியோ.!