பல்கலைக்கழகத்தில் முதலிரவு ஏற்பாடு : விருந்தினர் மாளிகையை தேன்நிலவுக்காக வாடகைக்கு விட்ட கொடுமை!!
Author: Udayachandran RadhaKrishnan22 August 2021, 2:21 pm
ஆந்திரா : முதலிரவிற்காக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அறையை வாடகைக்கு விட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் சம்பவம் தலைகுனிய செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் உள்ள அறை ஒன்றை ஸ்வர்ண குமாரி என்பவர் பெயரில் கடந்த 18, 19 ஆகிய தேதிகள் அன்று புதுமண தம்பதியின் முதலிரவுக்காக பல்கலைக்கழக அதிகாரிகள் வாடகைக்கு விட்டுள்ளனர்.
18,19 ஆகிய இரண்டு நாட்களும் அந்த அறையை நன்றாக அலங்கரிது முதலிரவு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 20ஆம் தேதி அங்கு சென்று பார்த்தவர்கள் அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கலாம் என்று யூகித்து அதிர்ச்சி அடைந்தனர்.
அன்றைய தினம் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுபற்றி விசாரணை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் ஐந்து நபர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அறையை முதல் இரவிற்காக வாடகைக்கு விட்ட சம்பவம் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0