குடியரசு தின அணிவகுப்பு: முதல்முறையாக ரபேல் போர் விமானம் பங்கேற்பு..!!
19 January 2021, 9:27 amபுதுடெல்லி: முதல்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் ரபேல் போர் விமானம் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியன்று, தலைநகர் டெல்லியில் மிகுந்த கோலாகலத்துடனும் கொண்டாடப்படுவது வழக்கம். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் நிலையில், இந்த ஆண்டும் வழக்கம்போலவே குடியரசு தினம் வரும் 26ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெறுகிறது.
குடியரசு தின அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் 38 போர் விமானங்களும், ராணுவத்தின் 4 விமானங்களும் விண்ணில் அணிவகுத்து அசத்தப்போகின்றன. அதிலும் சிறப்பு நிகழ்வாக, முதல் முறையாக இந்த ஆண்டு இந்த விமான அணிவகுப்பில், ரபேல் போர் விமானம் இடம் பெறப்போவதாக விங் கமாண்டர் இந்திரானில் நந்தி தெரிவித்துள்ளார்.
‘வெர்டிகல் சார்லி பார்மேஷன்’ என்று சொல்லப்படுகிற வகையில், ஒற்றை விமானமாக இந்த ரபேல் போர் விமானம் குறைவான உயரத்தில் பறந்து மேலே செல்லும். அது அதிக உயரத்தில் நிலைபெறுவதற்கு முன்பாக சாகசங்களை செய்யும் ரபேல் போர் விமானம், பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0
0