மராட்டிய மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 5 பயணிகள் பலி..!!

22 October 2020, 10:05 am
bus acc - updatenews360
Quick Share

மராட்டியத்தில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மும்பை: மராட்டிய மாநிலம் நந்தூர்பர் மாவட்டம் மால்காபூரில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் நோக்கி நேற்று தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் கோண்டாய் பரி மலைப்பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற பேருந்தை முந்தி செல்ல ஓட்டுனர் முயற்சித்துள்ளார்.

அப்போது எதிரே லாரி வந்ததால், பேருந்தை திருப்ப முயற்சித்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரம் என்பதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் கண் விழிப்பதற்குள் பஸ் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் 8 மணி நேர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

டிரைவர் முந்த முயற்சித்தார். அப்போது, எதிரே லாரி ஒன்று வந்ததை கண்ட டிரைவர் விபத்தை தவிர்க்க பஸ்சை திருப்பினார். இந்த விபத்தில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 35 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 15

0

0