கொடியேற்றம் ரத்து: கோவா தீவில் பதற்றம்..!!

Author: Aarthi Sivakumar
15 August 2021, 8:00 am
Quick Share

பனாஜி: கோவாவின் சாவோ ஜசின்டோ தீவில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அங்கு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கடற்படை அறிவித்துள்ளது.

கோவாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுதும் உள்ள தீவுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு ராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
எனினும், தெற்கு கோவாவில் உள்ள சாவோ ஜசின்டோ என்ற தீவில் மூவர்ணக் கொடியை ஏற்ற, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கொடி ஏற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக, இந்திய கடற்படை நேற்று அறிவித்தது. எனினும் திட்டமிட்டப்படி தீவில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை நடத்த முதலமைச்சர் சாவந்த் கடற்படை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, தீவில் கொடி ஏற்ற தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 182

0

0