சென்னை உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து விமானங்கள் நுழைய தடை..! மமதா அதிரடி

11 August 2020, 11:13 am
mamata_banerjee_updatenews360 (2)
Quick Share

கொல்கத்தா: கொல்கத்தாவுக்கு 6 நகரங்களில் இருந்து விமானங்கள் வர அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும்,  குணமடைந்தோர் சதவிகிதமும் உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனா தொற்றில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்திலும் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கிறது. 2வது இடத்தில் தமிழகம் உள்ளது.

மகாராஷ்டிராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் தொற்றுகள் அதிகம். தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்.

இந் நிலையில், மேற்கு வங்க அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகம் பதிவாகி உள்ள நகரங்களில் இருந்து விமானங்கள் கொல்கத்தா விமான நிலையம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் நகரங்களில் இருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி இல்லை. இந்த தடை வரும் 31ந்தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 17ம் தேதி இதேபோன்று தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஜூலை 30 வரை விமான வருகைக்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.