நடிகையுடன உல்லாசம்.. திருமணம் செய்வதாக கூறி மோசடி.. தொழிலதிபரை காப்பாற்றிய முன்னாள் CM? ஆட்சி மாற்றத்தால் அம்பலம்!
Author: Udayachandran RadhaKrishnan27 August 2024, 2:36 pm
மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ஜெ.எஸ்.டபுள்யூ நிறுவனத்தின் தலைவரான சஜ்ஜன் ஜிண்டால் மீது மும்பையில் கடந்த டிசம்பர் மாதம் 30 வயதான குஜராத்தை சேர்ந்த நடிகை காதம்பரி நரேந்திரகுமார் ஜேத்வானி வழக்கு தொடர்ந்தார்.
இதில் சஜ்ஜன் ஜிண்டால் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
இந்த புகாரில் சஜ்ஜன் ஜிண்டால் எப்படி அறிமுகமானார்… எப்படி ஏமாற்றினார் என்று இந்தப் புகாரில் காதம்பரி விளக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து வெளியே வர சஜ்ஜன் ஜிண்டாலின் நெருங்கிய நண்பரான அப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டுள்ளார்.
இதனையடுத்து ஜெகன் மோகன் உத்தரவுப்படி அப்போதைய அரசு ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி விஜயவாடாவின் அப்போதைய காவல் ஆணையராக இருந்த கிராந்தி ரானா டாடாவிடம் நடிகை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து விஜயவாடாவை சேர்ந்த குக்கலா வித்யாசாகர் என்ற தொழிலதிபர் மூலம் போலி ஆவணங்கள் கொடுத்து ₹ 5 லட்சம் பணம் பெற்று நடிகை காதம்பரி நரேந்திர குமார் ஜெத்வானி மோசடி செய்ததாக புகாரின் அடிப்படையில்
மும்பையில் சஜ்ஜன் ஜிண்டால் மீது வழக்குப்பதிவு செய்த நடிகை காதம்பரி நரேந்திர குமார் ஜெத்வானி குடும்பத்தினரை கடந்த ஜனவரி மாதம் விஜயவாடா போலீசார் மும்பை சென்று தீவிரவாதிகளை கைது செய்ய போவது போல் பெரும் படையுடன் மும்பை சென்று கைது செய்து அழைத்து வந்தனர்.
பின்னர் ஒரு விருந்தினர் மாளிகையில் பதினெட்டு நாட்கள் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர் பிப்ரவரி 2 ம் தேதி போலீசார் கைது செய்ததாக காண்பித்து எப்.ஐ.ஆர். பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு போலீசார் தொடர் அழுத்தம் காரணமாக வழக்கை வாபஸ் வாங்க ஒப்பு கொண்டதால் போலீசாரே வழக்கறிஞர் வைத்து நடிகை குடும்பத்திற்கு ஜாமீன் பெற்று கொடுத்தனர்.
ஜாமினில் வெளியே வந்த நடிகை மார்ச் மாதம் மும்பை போலீசில் சஜ்ஜன் ஜிண்டால் மீதான வழக்கை வாபஸ் பெற்றார்.
அந்த வழக்கு… இந்த வழக்கின் நடுவில் என்ன நடந்தது என்ற நிலையில் சினிமா படத்தின் கதையை போன்று தற்போது 7 மாதங்களுக்கு பிறகு வெளியே தெரிய வந்துள்ளது.
ஆனால் மும்பையில் இருந்து நடிகை ஒருவரின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம் அப்போதைய கமிஷனர் கிராந்தி ராணா டாடா முன்னிலையில் நடந்ததால் இந்த விவகாரம் யாருக்கும் ஊடகங்களுக்கு தெரியாமல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இந்த விவகாரம் தற்போது வெளியாகி உள்ள நிலையில் உண்மைகளை கண்டறிய வேண்டும்.
ஆந்திர போலீசார் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்துச் நடந்த உண்மையைச் கேட்டறிந்து எத்தனை மூத்த அதிகாரிகள் சம்மந்தப்பட்டாலும் அவர்களை விட்டு வைக்கக் கூடாது.
காவல்துறை மாஃபியா செயல்களில் ஈடுபட்டால் சாமானியர்களை நிலை என்ன என்று கேள்வி சமூக வளைதளத்தில் பரவியது.
இதுகுறித்து விஜயவாடா தற்போதைய காவல் ஆணையர் ராஜசேகர் பாபு கூறுகையில் இது குறித்து எந்த வித புகாரும் வரவில்லை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் இது குறித்து உண்மை கண்டறிந்து விசாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
0
0