மத்திய பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: சீட்டுக்கட்டு போல் சரிந்த பாலம்…பதற வைக்கும் காட்சிகள்..!!

Author: Aarthi
4 August 2021, 2:17 pm
Quick Share

மத்திய பிரதேசம்: கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 பாலங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை நீடித்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தாட்டியா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மடிக்கெடா அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தாட்டியா நகரை ரத்தங்கார் நகருடன் இணைக்கும் பாலம் ஒன்று வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்து செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

Views: - 296

0

0