கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம் : தரைப்பாலத்தை கடக்க முடியாமல் கவிழ்ந்து விழுந்த லாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2021, 6:34 pm
Lorry - Updatenews360
Quick Share

ஆந்தரா : மழை வெள்ளத்தின் போது பாலத்தை கடக்க முயன்ற லாரி கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. இதனால் முடிலேறு நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முடிலேறு நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற லாரி ஒன்று மேம்பாலத்தின் மீது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

மற்றொரு லாரி மழை வெள்ளத்தை கடந்து செல்ல இயலாமல் நின்றுவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று இரண்டு லாரிகளையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .

Views: - 194

0

0