காவல் ஆய்வாளருக்கு மலர் அபிஷேகம் செய்த திருநங்கைகள் : எதுக்கு தெரியுமா? நெகிழ்ச்சி சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2021, 1:36 pm
ஆந்திரா : திருட்டு போன 4 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 10 சவரன் நகைகளை அப்படியே மீட்டு திருப்பிக் கொடுத்த காவல் ஆய்வாளருக்கு மலர்தூவி திருநங்கைகள் நன்றி தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள விடப்பனக்கல் கிராமத்தில் திருநங்கை அனுஷ்கா என்பவர் வசித்து வருகின்றார். கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு அனுஷ்காவின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 4 லட்ச ரூபாய் பணம், சுமார் பத்து சவரன் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதுபற்றி அனுஷ்கா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தி கொள்ளையனை கைது செய்து அவனிடமிருந்து 4 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 சவரன் தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை மீட்டு அனுஷ்காவிடம் ஒப்படைத்தார்.
எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த கிராமத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர் ஒன்று சேர்ந்து காவல் ஆய்வாளர் மீது மலர்களை தூவி மகிழ்ச்சி அடைந்தனர்.
0
0