வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் பனி மூட்டம் : டெல்லியில் ரயில்கள் தாமதம்!!

2 February 2021, 9:13 am
Delhi Fog- Updatenews360
Quick Share

டெல்லியில் கடும் பனிமூட்டத்தின் காரணமாக ரயில்கள் தாமதமாக வந்து செல்கிறது.

கடந்த சில நாட்களாக பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது.

சில அடி தூரம் மட்டுமே கண்ணுக்கு தெரிவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியல் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Delhi Weather 2020: Moderate Fog In Delhi On New Year Morning, Flight  Operations Normal

கடும் பனிமூட்டத்தால் காற்றின் தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 347 ஆக பதிவாகி இருப்பதால் காற்றிதரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக காற்று தரம் மற்றும் காலநிலை ஆய்வு தெரிவித்துள்து.

பனிமூட்டம் காரணமாக 4 ரயில்கள் தாமதமாக வருவம் என வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Views: - 22

0

0