பெட்ரோல் விலை குறைய வேண்டுமா?…அப்ப இதுதான் ஒரே வழி: பங்க் ரசீதால் பாஜகவினர் கொந்தளிப்பு..!!
3 March 2021, 5:48 pmமும்பை: பெட்ரோல் விலையை குறைக்க இந்த வழியை பின்பற்றுங்கள் என்ற வாசகம் அடங்கிய பெட்ரோல் பில் ஒன்று சமூன வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மும்பையின் விக்ரோலி பகுதியில் செயல்படும் ஹெச்பிஎல் விற்பனையாளர் வழங்கிய பெட்ரோல் பில் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தின் படி, பெட்ரோல் விலையை குறைக்க அடுத்த முறை நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள் எனும் வாசகம் இடம்பெற்று இருக்கிறது.
பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். இதனையொட்டி பெட்ரோல் விலையை குறைக்க, அடுத்த முறை நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள் எனும் வாசகம் அடங்கிய பெட்ரோல் பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது போலியான பில் என தெரியவந்துள்ளது. அரசு நிறுவனமான ஹெச்பிசிஎல் தங்களது விற்பனையகத்தின் பில் இந்த வடிவில் இருக்காது என உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் வைரலாகும் பில் உண்மையானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன என அறிவுறுத்தியுள்ளனர்.
0
0