ராமர் கோவில் தீர்ப்பு தந்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி..! கொரோனா பாசிட்டிவ், மருத்துவமனையில் அட்மிட்

5 August 2020, 9:29 am
ranjan gogoi3 -updatenews360-3
Quick Share

டெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை சாதாரண மக்களையும், மருத்துவர்கள், காவல்துறையினரையும் மட்டுமே குறி வைத்து தாக்கி வந்த கொரோனா இப்போது அடுத்தக்கட்டத்துக்கு சென்றுவிட்டது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பாதித்தது.

பின்னர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என தாக்கியது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா உறுதியானது. கர்நாடகாவில் எடியூரப்பா, சித்தராமையா, ஆளுநர் புரோகித் என கொரோனா தொற்று வெகு வேகமாக பரவியது.

இந் நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சய் கோகாய்க்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் இப்போது ராஜ்சபா எம்பியாக இருக்கிறார். ராமர்கோவில் தொடர்பான வழக்கில் தீர்ப்பை அளித்த பெருமைக்குரியவர்.

கொரோனா அறிகுறிகள் இருப்பதாக அவர் உணர்ந்ததால் தம்மை கோவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அதன் முடிவுகளின் அடிப்படையில் கோகாய்க்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவருடன் யார், யார் தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அமைச்சர்களை கடந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கும் கொரோனா தாக்கியிருப்பது மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 9

0

0