அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார் : பிரதமர் மோடி இரங்கல்!!

23 November 2020, 7:55 pm
Tarun Gogoi - Updatenews360
Quick Share

அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் உடல்நலக்குறைவால் காலமானார்.

அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் கொரோனா பிடியில் சிக்கினார். இதன் பின் உடல் நலம் தேறினார். ஆனால் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கண்காணித்து வந்த மருத்துவர்கள் அறிக்கையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில் அவரது உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தருண் கோகோய் உடல்நிலை அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையில், அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், தனது திட்டமிடப்பட்ட அனைத்து பணிகளையும் பாதியிலேயே ரத்து செய்து விட்டு, திப்ருகரில் இருந்து குவஹாத்திக்கு திரும்பினார்.

ரோகீப் குலேரியா தலைமையிலான அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் குழுவுடன் கோகோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், மாலையில் அவரது உயிர் பிரிந்தது.

தருண் கோகாய் மறைவுக்கு பிரதமர் நரேநந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரசின் மூத்த தலைவராக விளங்கிய தருண் கோகாய், அசாம் மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். அவருக்கு வயது 86.

Views: - 26

0

0