கேரள முன்னாள் முதலமைச்சருக்கு சிறுநீரக கோளாறு: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

Author: Aarthi Sivakumar
2 November 2021, 11:26 am
Quick Share

திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அச்சுதானந்தனுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 287

0

0