முன்னாள் முதலமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. ஐசியூ பிரிவில் சிகிச்சை : தொண்டர்கள் மருத்துவமனைக்கு வரத் தடை.!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 5:34 pm
Mulayam Singh - Updatenews360
Quick Share

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டு உள்ளார். முலாயம் சிங் யாதவுக்கு இன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எனினும், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வெளியே வந்து குவிந்து விடவேண்டாம் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. அவர் முழு அளவில் குணமடைந்த பின்னர் அவரை சந்திக்கலாம் என்றும் கட்சி தெரிவித்து உள்ளது.

Views: - 388

0

0