துப்பாக்கியை காட்டி அதிகாரிகளை மிரட்டிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்.! வீடியோவால் பரபரப்பு!!

31 August 2020, 1:25 pm
Former Minister Threaten- Updatenews360
Quick Share

தெலுங்கானா : கால்வாய் விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகளை துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய முன்னாள் அமைச்சரின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா பகுதியில் கால்வாய் விரிவாக்க பணிகள் நடைபெறுகின்றன. கால்வாய் விரிவாக்க பணிகளுக்காக தெலங்கானா மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி உரிய இழப்பீடுகளையும் வழங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் ரெட்டிக்கு சொந்தமாக இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கால்வாய் விரிவாக்க பணிகளை மேற்கொள்வதற்காக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்களுடன் பொறியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் மோகன் ரெட்டி தன்னிடம் இருக்கும் லைசன்ஸ் ரிவால்வரை காண்பித்து அதிகாரிளை மிரட்டி கால்வாய் விரிவாக்க பணிகள் செய்யாமல் தடுத்தார். அப்போது முன்னாள் அமைச்சரின் அடாவடியை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த நபரை அவருடைய உதவியாளர்கள் கடுமையாக தாக்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒப்பந்ததாரர், பொறியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுபற்றி தெலுங்கானா மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மோகன் ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

Views: - 9

0

0