86 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி: ஆங்கிலத்தில் 100க்கு 88 மார்க் பெற்று அசத்திய முன்னாள் அமைச்சர்…குவியும் பாராட்டு..!!

Author: Aarthi Sivakumar
7 September 2021, 12:58 pm
Quick Share

சண்டிகர்: 86வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி ஆங்கிலத்தில் 88 மதிப்பெண் பெற்று அசத்திய அரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அரியானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் துணைப் பிரதமர் சவுதாரி தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா (86). முன்னாள் முதல்வரான இவர், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது அவரது வீட்டில் வசிக்கிறார்.

இவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்று கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார். இதையடுத்து, பாஜகவுக்கு எதிராக 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். டெல்லி திகார் சிறையில் இருந்த காலகட்டத்தில், மாநில அடிப்படை கல்வித் திட்டத்தின் மூலம் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்.

ஆனால், அவரால் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. பலமுறை தேர்வெழுதியும் ஆங்கில தாளில் தோற்றார். தற்போது சிறையில் இருந்து வெளியே வந்ததால், மீண்டும் ஆங்கில தாளை எழுத ஆயத்தமானார். அதற்காக, சிறப்பு ஆசிரியர்களை கொண்டு ஆங்கில பாடங்களை தொடர்ந்து படித்தார். கடந்த ஆக. 18ம் தேதி ஆங்கில தாளுக்கான தேர்வை எழுதினார்.

இந்த துணைத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ஓம்பிரகாண் சவுதலா தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார். இது மட்டுமின்றி ஆங்கிலத்தில் 100க்கு 88 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 86 வயதிலும் சாதனை படைத்த முன்னாள் ஹரியானா முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், வயதுக்கும், கல்விக்கும் தொடர்பில்லை…விடாமுயற்சி ஒன்றே முக்கியம் என்பதை ஓம் பிரகாஷ் சவுதாலா நிரூபித்துள்ளார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Views: - 353

0

0