மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உடல்நலக்குறைவால் மறைவு..!
5 August 2020, 2:25 pmமகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறந்தார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயதான நிலங்கேகர் உடல்நலக்குறைவால் இறந்தார்.
மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள லாதூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரான நிலங்கேகர் 1985 ஜூன் முதல் 1986 மார்ச் வரை மாநில முதல்வராக இருந்தார்.
1985’ஆம் ஆண்டில் எம்.டி தேர்வு முடிவுகளில் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, பம்பாய் உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக கடுமையான தண்டனைகளை விதித்ததை அடுத்து அவர் தனது பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.