இந்தியாவில் குறைந்து வரும் ஜனநாயகம்…! அனைவரும் குரல் எழுப்ப ப. சிதம்பரம் அழைப்பு

6 August 2020, 10:00 pm
chidambaram updatenews360
Quick Share

டெல்லி: நாளுக்கு நாள் ஜனநாயகம் குறைந்து கொண்டே வருவதாக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறி உள்ளார்.

இதுகுறித்து ப. சிதம்பரம் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளதாவது: ஓராண்டாக சிறை வாழ்க்கை போல வாழ்ந்து வரும் காஷ்மீரில் உள்ள 75 லட்சம் மக்களை அனைத்து அரசியல் கட்சியினரும் நினைத்து பார்க்க வேண்டும்.

காஷ்மீரில் அனைத்து தலைவர்களும் வீட்டு சிறையில் உள்ளனர். யாராவது இது பற்றி கேள்வி எழுப்பினால், அப்படி எதுவும் இல்லை என்று கூறுவார்கள்.  அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவேண்டும் என்று நடவடிக்கை மேற்கொண்ட பரூக் அப்துல்லாவுக்கு அனுமதி வழங்கவில்லை.

இதன் பெயர்தான் ஜனநாயகமா? மெகபூபா முப்தியை விடுவிக்க வேண்டும், வீட்டுக்காவலில் இன்னமும் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒரே குரலில் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும்.

இந்தியாவில் நாட்கள், நகர, நகர மனித உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டே இருக்கின்றன. அனைத்தையும் உலக மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் அனைவரும் பெருமையாக கூறிக்கொள்ளும் விஷயம் ஜனநாயகம் என்பது தான். இந்தியா ஒரு ஜனநாயகமான, சுதந்திரமான நாடு. ஆனால் நாளுக்கு நாள் இவை குறைந்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 13

0

0