முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திடீரென மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சியில் காங்., தலைவர்கள்..!!!

Author: Babu Lakshmanan
13 October 2021, 7:40 pm
Quick Share

டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன்சிங். இவர் பிரதமராக இருந்த போது, 2009ம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வந்தார்.

கடந்த 3 நாட்களாக அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், இன்று திடீரென உடல் சோர்வு அடைந்ததையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 112

0

0

Leave a Reply