பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!
18 August 2020, 12:17 pmடெல்லி : குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மூளையில் ஏற்பட்ட கட்டியை அறுவை சிகிச்சை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் கொரோனா தொற்றால் அவரின் உடல்நிலை மோசமானது.
கடந்த 9 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. மேலும், அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளதால் சிகிச்சை அளிப்பதில் மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்திருந்தது.
இந்த நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
0
0