முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி..! மருத்துவமனையில் அனுமதி..!

10 August 2020, 1:37 pm
pranab_mukherjee_updatenews360
Quick Share

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். “ஒரு தனி நடைமுறைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது, இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று பிரணாப் முகர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

இதையடுத்து, சமீபத்தில் தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக தங்களை சோதித்துப் பார்க்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

“கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொள்வதோடு கொரோனா சோதனைகளுக்கும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.” என்று பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பல அரசியல் தலைவர்கள் சமீபத்திய காலங்களில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவர்களில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால், விஸ்வாஸ் சாரங், தர்மேந்திர பிரதான், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இதில் அடங்குவர்.