ஆல்வார் கூட்டு பாலியல் பலாத்காரம்..! அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்..!

Author: Sekar
6 October 2020, 7:01 pm
prison_jail_inmate_updatenews360
Quick Share

ஆல்வாரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் இன்று மாவட்டத்தில் நடந்த 2019 கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ கிளிப்பை படமாக்கி பரப்பியதற்காக ஐ.டி சட்டத்தின் கீழ் குற்றவாளிகளில் ஒருவருக்கு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 26’ஆம் தேதி தென்காசி-ஆல்வார் பைபாஸில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் நான்கு பேரும் தனது கணவருக்கு முன்னால் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருந்தனர்.

இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட ஹன்ஸ்ராஜ் குர்ஜார், அசோக் குஜார், சோட்டேலால் குர்ஜார் மற்றும் இந்திராஜ் குர்ஜார் ஆகியோருக்கு கடுமையான ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஹன்ஸ்ராஜ் குர்ஜார் மீண்டும் இதே குற்றத்தை செய்ததால் அவர் இறக்கும் காலம் வரை தண்டனை அனுபவிப்பார் தீர்ப்பளிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவருக்கான வக்கீல் ஆல்வாரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆயுள் தண்டனையுடன் சேர்த்து நீதிமன்றம் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றவாளிகளுக்கு அபராதமும் விதித்துள்ளது. இந்த அபராதத்தை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க நீதிமன்றம் மேலும் தீர்ப்பளித்துள்ளது.

Views: - 41

0

0