கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு!

Author: Hariharasudhan
2 November 2024, 6:02 pm

கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும் பாரதப்புழா ஆற்றின் மேல் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த ரயில்வே மேல்பாலத்தில் வழக்கம்போல் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக டெல்லி – திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 4 பேர் மீது ரயில் மோதியது.

இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த நான்கு பேரின் உடலையும் மீட்டனர். பின்னர், இது தொடர்பான விசாரணையில் உயிரிழந்த 4 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த வள்ளி, ராணி, லெட்சுமண் உள்ளிட்ட 4 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 406

    0

    0