24 மணி நேரமும் இலவச மின்சாரம் : அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

Author: kavin kumar
16 January 2022, 5:46 pm
Quick Share

கோவா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் 24 மணிநேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. டெல்லியை தவிர மேலும் ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் ஆம் ஆத்மி கட்சி மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் 24 மணிநேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்குவோம் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்கப்படும் என்றும், அனைத்து கிராமங்களிலும் இலவச சுகாதார நிலையம் அமைத்து தருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 317

0

0