இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நவ.30ம் தேதியுடன் நிறைவு: மத்திய அரசு திட்டவட்டம்..!!

Author: Aarthi Sivakumar
6 November 2021, 8:42 am
Quick Share

புதுடெல்லி: ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நவம்பர் 30ம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் குறையாததால் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால், உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இப்பணி நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியதாவது, தற்போது பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளிச்சந்தையில் தாராளமாக கிடைக்கும் அளவுக்கு உணவு தானியங்கள் புழக்கம் நன்றாக உள்ளது.

அந்த அளவுக்கு அரிசி, கோதுமையை வினியோகித்துள்ளோம். எனவே, வருகிற 30ம் தேதிக்கு பிறகு இலவச உணவு தானியம் வழங்கும் பணி நீட்டிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 648

0

0