திருப்பதியில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச சுவாமி தரிசன டிக்கெட்: தேவஸ்தானம் அறிவிப்பு

Author: Udhayakumar Raman
19 September 2021, 10:23 pm
tirupati Online Free Token -Updatenews360
Quick Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் இலவச சுவாமி தரிசன டிக்கெட் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் பக்தர்களை தவிர மற்ற மாநில பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் தரிசனம் செய்வது குறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: நாளை முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். நாளை முதல் இரவு 11.30 மணி வரை இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இலவச தரிசனத்திற்காக நாள்தோறும் வழங்கப்பட்டு வந்த 2 ஆயிரம் டிக்கெட்டில் இருந்து 8 ஆயிரம் டிக்கெட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Views: - 117

0

0