எல்லை விவகாரம் முதல் தடுப்பூசி வரை..! நேதாஜி இருந்திருந்தால் நிச்சயம் பெருமிதம் கொண்டிருப்பார்..! மோடி உரை..!

23 January 2021, 7:22 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தற்போது இருந்திருந்தால், இந்தியாவின் சுயசார்பு குறித்தும், பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முதல் சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரை, இந்தியாவின் வலிமையை உலகம் காண்பதைக் கண்டும் பெருமிதம் அடைந்திருப்பார் என்றும் கூறினார்.

மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருப்பார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நேதாஜியின் பிறந்தநாளை துணிச்சல் தினமாக கொண்டாட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சுபாஷ் சந்திரபோஸின் 125’வது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தொடங்கி வைத்து, கொல்கத்தாவின் விக்டோரியா மெமோரியலில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், “ஒரு சுயசார்பு கொண்ட மேற்கு வங்கம் ஒரு சுயசார்பு கொண்ட இந்தியாவை கட்டமைக்கும்.” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர். எனினும், தான் அவமதிக்கப்பட்டதாக கூறி, முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நிகழ்வில் பேச மறுத்துவிட்டார். மம்தா பானர்ஜியை  அழைத்தபோது கூட்டத்தில் ஒரு பகுதியினர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பியதால் அவர் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

“இது ஒரு கட்சித் திட்டம் அல்ல. இது அரசாங்கத்தின் நிகழ்வு. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாகும். அரசாங்கத்திற்கு கொஞ்சம் கண்ணியம் இருக்க வேண்டும். என்னை இங்கு அழைத்த பிறகு என்னை அவமதிக்க வேண்டாம். இதை நான் பேச மறுக்கிறேன் ஜெய் ஹிந்த், ஜெய் பங்களா.” என்று பானர்ஜி கூறினார்.

முன்னதாக, நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிரந்தர அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

Views: - 7

0

0