துறவியாய் போன அதிகாரி! அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2 May 2021, 4:24 pm
Quick Share

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய மூத்த அதிகாரி ஒருவர், அனைத்தையும் துறந்து, ஜைன மத துறவியாக மாறினார். இது தெரிந்த நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர் பிரகாஷ் ஷா. முகேஷ் அம்பானியின் வலது கரமாகவே இவர் செயல்பட்டார். ஆண்டுக்கு ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய அவர் திட்டப் பிரிவு துணை தலைவராக பணியாற்றிய போது, தனது பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்னதாகவே துறவி ஆக வேண்டும் என நினைத்திருந்திருக்கிறார். கொரோனா பாதித்ததால், அவர் தீட்ஷை பெறவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் அவர் மகாவீர் ஜெயந்தி அன்று, தீட்சை பெற்று ஜைன துறவி ஆனார். அவருடன் அவரது மனைவி நைனாவும் தீட்ஷை பெற்று துறவியானார். ஐஐடி–யில் இன்ஜினியரிங் படித்த பிரகாஷ் ஷாவின் இளைய மகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 24 வயதில் அனைத்தையும் துறந்து துறவி ஆகிவிட்டார். அவரது மூத்த மகன் திருமணம் முடித்து இல்லற வாழ்வில் உள்ளார். அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

ஓய்வு பெற்றதும் சம்பாதித்த பணத்தில் ஹாயாக ஓய்வு எடுக்க வேண்டும் என பலரும் வாழ்ந்து வரும் நிலையில், ஆசை, பணம் என அனைத்தையும் துறந்த பிரகாஷ் ஷாவை வாய் பிளந்து பார்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்..!

Views: - 75

0

0

Leave a Reply