கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்: போலீசார் தீவிர கண்காணிப்பு..!!

Author: Aarthi Sivakumar
26 June 2021, 9:46 am
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

தொற்று விகிதம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தற்போது வார நாட்களில் ஊரடங்கில் தளர்வு அமலில் இருந்து வருகிறது. பஸ், வாகன போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்றும், நாளையும் வார இறுதி நாட்களில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பஸ் போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இயங்காது என அரசு அறிவித்து உள்ளது. ஓட்டல்களில் ஆன்லைன் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மருத்துவம், சுகாதாரம், பத்திரிகை வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு இன்றும், நாளையும் அமல்படுத்தப்படும். இந்த புதிய முயற்சியால் கொரோனா பாதிப்பு குறைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 229

0

0