கம்பீருக்கு 3வது முறையாக கொலை மிரட்டல் : அடுத்தடுத்து வீட்டிற்கு போடப்படும் போலீஸ் பாதுகாப்பு

Author: Babu Lakshmanan
28 November 2021, 5:47 pm
Quick Share

பாஜக எம்பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு 3வது முறையாக பயங்கரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அரசியல் மற்றும் விளையாட்டுக்கள் தொடர்பாக தடாலடியாக கருத்துக்களையும், பதில்களையும் வெளியிடுவார்.

இந்த நிலையில், கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ‘ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர்’ என்ற பயங்கரவாத அமைப்பிடம் இருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக கவுதம் கம்பீர் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கம்பீர் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முன்னதாக, ஏற்கனவே இவருக்கு ஒருமுறை பயங்கரவாதிகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இன்று மூன்றாவது முறையாக கவுதம் கம்பீருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இ-மெயில்கள் வந்துள்ளன. இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

Views: - 1046

0

0