விற்பனைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் : குப்பை லாரியில் நகராட்சி ஊழியர்கள் ஏற்றியதால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2021, 4:26 pm
Ganapathi STatue -Updatenews360
Quick Share

ஆந்திரா : குண்டூரில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற நகராட்சி ஊழியர்களின் சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சாலை ஓரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை குண்டூர் நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற மனதை புண்படுத்தும் படியான சம்பவம் நடைபெற்றது.

குண்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் தாங்கள் தயார் செய்த விநாயகர் சிலைகளை நகரிலுள்ள சாலை ஓரத்தில் விற்பனைக்காக வைத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்று கூறி குப்பை லாரியில் ஏற்றி சென்றனர். இதுதொடர்பாக விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

Views: - 368

0

0