சமூகவலைதளங்களில் வெளியான 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை : சிபிஎஸ்இ விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2021, 6:52 pm
CBSE -Updatenews360
Quick Share

சமூக வலைதளங்களில் CBSE வெளியிட்ட பொதுத்தேர்வு அட்டவணை என்று பரப்பப்படும் தகவல் போலியானது.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுக்கான அட்டவணை எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என CBSE விளக்கமளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் CBSE வெளியிட்ட பொதுத்தேர்வு அட்டவணை என்று பரப்பப்படும் தகவல் போலியானது என்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த கல்வியாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் இரண்டாகப் பிரித்து நடத்தப்படும் என ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது.

அதன்படி, முதற்கட்ட தோ்வு நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடத்தப்படும் என்றும் 2ஆம் கட்டத் தோ்வு மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

முதல் பருவ தேர்வில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையில் வினாக்கள் கேட்கப்படும் என கூறப்பட்டது.

Views: - 227

0

0