“தடுப்பூசியை போடுங்க தக்காளியை அள்ளுங்க“ : சத்தீஸ்கரில் மக்களுக்காக நகராட்சி எடுத்த புதிய முயற்சி!!

20 April 2021, 1:20 pm
Tomato Free for Vaccinated -Updatenews360
Quick Share

சத்தீஸ்கர் : தடுப்பூசி செலுத்தினால் தக்காளி இலவசம் என பிஜாப்பூர் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனா பரவைல தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட மக்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நகராட்சி நிர்வாகம் ஒன்று புதிய முயற்சியை கையாண்டு வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்த முன்வரவேண்டும் என்பதை உத்வேகமாக கொண்டு புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ஒரு கிலோ அளவில் தக்காளி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தருவதற்காக போதிய அளவில் தக்காளிகளை வியாபாரிகள் நகராட்சிக்கு தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளுது.

இந்த புதிய முயற்சி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்வேகப்படுத்தவே எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். காய்கறி விற்பனையாளர்களிடம் இது குறித்து பேசியதும், அவர்கள் தக்காளியை தந்தார்கள் என கூறினார்.

Views: - 132

0

0