ஆயுதக் கடத்தல் கும்பலை சுற்றி வளைத்த உத்தரபிரதேச போலீஸ்..! மூன்று பேரைக் கைது செய்து அதிரடி..!

23 August 2020, 3:56 pm
aRREST_uPDATEnEWS360
Quick Share

உத்தரபிரதேசத்தின் முராத்நகர் பிராந்தியத்தில் ஆயுதக் கடத்தல் தொடர்பாக காசியாபாத் போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் காவலர் ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும், உரிமம் பெற்ற துப்பாக்கியைத் திருடியதாகவும் கூறப்படுகிறது. கடத்தப்பட்ட வெடிமருந்துகளையும், மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் மனீஷ், வினீத், மனோஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூத்த காவல்துறை அதிகாரி கலானிதி நேதானி குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, சிறப்புக் குழுக்களை அமைத்து தப்பிய மற்ற குற்றவாளிகளை தேட உத்தரவிட்டார்.

குற்றவாளிகளை விசாரிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஆகஸ்ட் 16’ஆம் தேதி இரவு காவலரை சுட்டுக் கொன்றதாகவும் அவரது துப்பாக்கியைத் திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். இருப்பினும், தப்பிக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காயமடைந்தார்.

உத்தரபிரதேசத்தில் ஆயுதக் கலாச்சாரம் அதிகமாக உள்ள நிலையில், விகாஸ் துபே என்கவுண்டருக்கு பிறகு, ஆயுதக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வர உத்தரபிரதேச போலீஸ் தீவிர நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.