முடிந்தால் மோடியை அழைத்து வந்து வென்று காட்டுங்கள்..! பாஜகவுக்கு அசாதுதீன் ஒவைசி சவால்..!

26 November 2020, 12:31 pm
owaisi_rally_updatenews360
Quick Share

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (ஜிஹெச்எம்சி) வரவிருக்கும் தேர்தலுக்காக பழைய நகரமான ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்ய, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.

“நீங்கள் (பாஜக) நரேந்திர மோடியை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்யுங்கள். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்ப்போம். பிரதமரை அழைத்து வாருங்கள், ஏன் மற்றவர்களை அழைத்து வருகிறீர்கள்?” என்று நேற்று இரவு ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் கூறினார்.

“அவரை (பிரதமர் மோடி) அழைத்து வாருங்கள். அவரது கூட்டத்தை இங்கே ஒழுங்கமைக்கவும், நீங்கள் எத்தனை இடங்களை வெல்வீர்கள் என்பதையும் நாங்கள் பார்ப்போம்” என்று ஓவைசி மேலும் கூறினார்.

பாஜக தலைவர்கள் தங்கள் உரைகளால் பிராண்ட் ஹைதராபாத்தை சேதப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஹைதராபாத் ஒவைசி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. அசாதுதீன் ஒவைசி 2004 முதல் மக்களவையில் ஹைதராபாத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 1984 மற்றும் 2004’க்கு இடையில், அவரது தந்தை சலாவுதீன் ஒவைசி ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் இங்கு வெற்றி பெற்றதுகுறிப்பிடத்தக்கது.

பாஜக மூத்த தலைவர்கள் ஹைதராபாத்தில் எதிர்வரும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்கிறார்கள். பெங்களூரு தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி ஆகியோர் அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அடங்கிய பிரச்சாரகர்களின் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1’ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4 ஆம் தேதி நடக்கும். மொத்தம் 150 வார்டுகள் உள்ள ஹைதராபாத்தில் மேயர் பதவி இந்த முறை ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2016 தேர்தலில், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் 44 இடங்களை வென்றது. டிஆர்டி 99 இடங்களையும், பாஜக வெறும் 4 இடங்களையும் பெற்றது. தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் தலா இரண்டு இடங்களை வென்றன.

இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியானது பாஜக மற்றும் ஏஐஎம்ஐஎம் இடையில் உள்ளது போல் ஒரு தோற்றம் நிலவுவதால், பாஜக அதிக எண்ணிக்கையிலான இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0