காதலனுக்காக போதை மருந்து கடத்திய காதலி : மறைந்திருந்து காதல் ஜோடிகளை வலையில் வீழ்த்திய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 3:58 pm
Lovers Arrest -Updatenews360
Quick Share

தெலுங்கானா : காதலனுக்காக போதை மாத்திரைகளை கடத்திய தகவை அறிந்த போலீசார் காதல் ஜோடிகளை கைது செய்தனர்.

ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தன்னுடைய காதலன் ஹேமந்த் குமாருக்காக போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்து ஆகியவற்றை விமானம் மூலம் கடத்துவதாக விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீசார் விமான நிலையத்திற்கு வெளியே சற்று தொலைவில் அந்த பெண்ணை பிடிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது கார் ஒன்றில் வந்த அந்த பெண் இறங்கும போது, அதே பகுதியில் தயாராக காத்திருந்த ஹேமந்த் குமார் அந்த பெண்ணிடம் இருந்த 2 கிராம் NAD போதை மருந்து மற்றும் NDMAX போதை மாத்திரைகள் 18 ஆகியவற்றை பெற்றுக்கொண்டார்.

தயாராக காத்திருந்த போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து போதை மருந்து மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் விசாகப்பட்டினம் பகுதியில் போதை மருந்துகளை பயன்படுத்திய வாலிபர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல் கடந்த 2 மாதத்திற்கு முன் ஹைதராபாத் நகரில் போதை மருந்துகள் பயன்படுத்தி குற்றத்திற்காக பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இளம்பெண் ஒருவர் ஹைதராபாத்திலிருந்து போதை மருந்து மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை வாங்கி விசாகப்பட்டினம் கடத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் இரண்டு நகரங்களிலும் போதை பொருட்களை விற்பனை செய்யும் கும்பல் தற்போதும் துடிப்புடன் செயல்படுவது மீண்டும் உறுதியாகி உள்ளது.

Views: - 511

0

0