GO KART விளையாட்டு விபரீதமானது : கார் சக்கரத்தில் தலைமுடி சிக்கி மாணவி பலி!!

Author: Udayachandran
9 October 2020, 1:11 pm
Huyderabad CAr Dead - Updatenews360
Quick Share

தெலுங்கானா : பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு பூங்காவில் உள்ள கார் போன்ற வாகனத்தின் சக்கரத்தில் தலைமுடி சிக்கி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள குர்ரம் கொண்டா பகுதியில் கோ கார்ட் (Go kart) என்ற பெயரிலான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. நேற்று மாலை ஹைதராபாத்தை சேர்ந்தவரான பிடெக் மாணவி வைஷ்ணவி தன்னுடைய நண்பர்களுடன் அங்கு சென்றார்.

கோகார்ட் நிர்வாகத்தின் நடைமுறைகளை முடித்தபின், வைஷ்ணவி அவருடைய நண்பர்கள் ஆகியோர் அங்கு இருந்த கார் போன்ற வாகனத்தை ஓட்டி சென்றனர். கோகார்ட் மைதானத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கு முன்னர் வாடிக்கையாளருக்கு ஹெல்மெட் அணிவித்து தேவையான ஆலோசனை வழங்கி அனுமதிப்பது நிர்வாகத்தின் வழக்கம்.

அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிய பின் வைஷ்ணவி அவருடைய நண்பர்கள் ஆகியோர் வாகனத்தை ஓட்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வைஷ்ணவியின் கூந்தல் வாகனத்தில் உள்ள சக்கரத்தில் பலமாக சிக்கிக் கொண்டது.

இதனால் தலை முடியுடன் சேர்ந்து வைஷ்ணவி தலையும் சக்கரத்தில் சிக்கி, அவர் அணிந்திருந்த ஹெல்மெட் உடைந்து அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மைதானத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் பரிதாபமாக மரணம் அடைந்து விட்டார்.இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள மேற்பட்ட போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 52

0

0