உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி..! மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த காங்கிரஸ் தலைவர்..!

17 December 2020, 6:37 pm
Congress_UpdateNews360
Quick Share

சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைத் தழுவிய சில நாட்களுக்குப் பிறகு, கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு, தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சோடங்கர் தனது ராஜினாமாவை நேற்று சமர்ப்பித்துள்ளார்.

டிசம்பர் 12 தேர்தலில் 39 உள்ளாட்சித் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியடைந்தது. மறுபுறம் கோவாவின் ஆளும் பாஜக 33 இடங்களை வென்றது.

“தோல்விக்கு பொறுப்பேற்று கிரிஷ் சோடங்கர் தனது ராஜினாமாவை சமர்ப்பித்துள்ளார்” என்று கோவா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் பண்டாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, முன்னாள் முதலமைச்சரும், தென் கோவாவின் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யுமான பிரான்சிஸ்கோ சர்தின்ஹா, அரசியல் ரீதியாக புதிய மாநிலத் தலைமையால் எடுக்கப்பட்ட மோசமான முடிவுகள் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தன என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0