அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர்: பிரதமரின் திட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம்…!!

Author: Aarthi
10 October 2020, 3:12 pm
Quick Share

கிராமப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் வழங்கும் பிரதமர் மோடியின் கனவு திட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமைக்கு உரித்தாகியுள்ளது கோவா.

கடந்த ஆண்டு சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை அறிவித்தார். நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

pm-jal-jeevan-updatenews360-1

2.30 லட்சம் வீடுகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் முதல் மாநிலமாக கோவா திகழ்கிறது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் முதல் ‘ஹர் கர் ஜல்’, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் விநியோகம் செய்யும் மாநிலம் என கோவா தனித்துவத்தை பெற்றுள்ளது என நீர் வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் இப்போது குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அறிவித்தார்.

goa-cm-updatenews360

2021 க்குள் கிராமப்புறங்களில் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் மாநிலத்தின் வருடாந்திர செயல் திட்டம் குறித்து மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முதலமைச்சருக்கு கடிதம் எழுதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Views: - 72

0

0