காந்தியைக் கொன்றவரின் ஆதரவாளரை கட்சியில் இணைத்துக்கொண்ட காங்கிரஸ்..! மத்தியப்பிரதேசத்தில் சலசலப்பு..!

25 February 2021, 2:50 pm
bablulal_joins_congress_updatenews360
Quick Share

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் மிகப்பெரிய ஆதரவாளர், குறிப்பாக நாதுராம் கோட்சேவின் பக்தராகவே வலம்வரும் பாபுலால் சவுராசியா இன்று காங்கிரசில் இணைந்துள்ளார். 

மத்திய பிரதேசத்தில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு சற்று முன்னதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே முன்னாள் நகராட்சி கவுன்சிலரான பாபுலால் நாத், காங்கிரஸ் தலைவர்களால் கட்சியில் சேர்க்கப்பட்டது, கட்சியில் உள்ள காந்தியவாதிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்நாத் பாபுலால் சவுராசியாவுக்கு பெரும் வரவேற்பு அளிக்கும் புகைப்படங்களை மத்திய பிரதேச காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. பாபுலால் முன்னதாக காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்து மகாசபாவின் உறுப்பினராக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்.

“நான் கடந்த காலத்தில் காங்கிரஸுடன் தொடர்பு கொண்டிருந்தேன், எனவே இது குடும்பத்திற்குத் திரும்புவது போன்றது” என்று பாபுலால் சவுராசியா கூறினார்.

கோட்சே தொடர்பான நிகழ்வுகளில் அவர் தீவிரமாக பங்கேற்பது குறித்த கேள்விக்கு, “அது என்னவென்று அப்போது எனக்குத் தெரியாது. இதுபோன்ற நிகழ்வுகளின் முன்னணியில் நான் தள்ளப்பட்டேன்.” என்று கூறிய பாபுலால் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்துத்துவ அமைப்புடனான உறவுகளை முறித்துக் கொண்டதாகக் கூறினார்.

Views: - 12

0

0