பரபரப்பை ஏற்படுத்தும் தங்க கடத்தல் விவகாரம்…! ஸ்வப்னாவிடம் 4 நாட்கள் விசாரிக்கும் என்ஐஏ

11 August 2020, 10:08 pm
swapna-nia-arrest - updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா, சந்தீப்பை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தகவல் தொடர்பு துறை மேலாளர் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் தலைமறைவானார் ஸ்வப்னா சுரேஷ். அவர்களை தேடும் பணி மும்முரமாக, ஸ்வப்னா, சந்தீப் நாயர் இருவரும் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற காவலில் எடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷின் 5 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் வரும் 21ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க என்ஐஏ நீதிமன்றம் தீர்ப்பளிக்க, எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுவை என்ஐஏ நீதிமன்றம் நிராகரித்து, ஸ்வப்னா சுரேஷூக்கான ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. ஸ்வப்னா, சந்தீப் நாயரையும் காவலில் எடுத்து விசாரிக்க, கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, அவர்களை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கொச்சி என்ஐஏ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Views: - 3

0

0