நிலத் தகராறு..! கோவில் பூசாரி மீது துப்பாக்கிச் சூடு..! ராஜஸ்தானை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் கொடூரம்..!

11 October 2020, 6:29 pm
Gonda_UpdateNews360
Quick Share

ராஜஸ்தானில் சமீபத்தில் ஒரு கோவில் பூசாரி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் உத்தரபிரதேசத்தின் கோண்டாவில் ஒரு கோவில் பூசாரி நேற்று இரவு சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாம்ரத் தாஸ் ராம் ஜான்கி கோவிலில் பூசாரியாக பணியாற்றுகிறார். ஒரு பழைய நில தகராறு தொடர்பாக பூசாரி மீது குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அவர் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தலைமறைவாகியுள்ள இதர குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம் என உத்தரபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ராஜஸ்தானில் கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற நடவடிக்கைகளை தட்டிக் கேட்டதற்காக, பூசாரி உயிரோடு கொளுத்தப்பட்ட நிலையில், அதே போன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்திலும் நடந்துள்ளது கோவில் பூசாரிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என பூசாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 52

0

0