கடும் வெயில் காரணமாக ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளி மற்றும் கல்வி கூடுதல் செயலாளர், பிரதாப் குமார் மிஸ்ரா சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இருப்பினும், இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (சிஎச்எஸ்இ) ஏற்கனவே திட்டமிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (சிஎச்எஸ்இ) ஏற்கனவே திட்டமிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறும். அதன்படி, வருடாந்திர மெட்ரிகுலேஷன் தேர்வு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி, மே 7 வரை நடைபெறும். CHSE-ஆல் நடத்தப்படும் 12-ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 31 வரை நடைபெறும். முன்னதாக, ஜூன் 6 முதல் ஜூன் 16 வரை 11 நாட்களுக்கு கோடை விடுமுறையை பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.