‘விரைவில் திறக்கப்படுகிறது திரையரங்குகள்’ : வரும் 8ம் தேதி வெளியாகிறது முக்கிய அறிவிப்பு ..!

5 September 2020, 11:31 am
Quick Share

நாடு முழுவதும் எப்போது தியேட்டர்கள் திறப்பு என்பது குறித்து வரும் 8ம் தேதி மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் புதிய திரைப்படங்கள் வெளிவர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

பல படங்கள் தயாரிக்கப்பட்டு போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெறாமல் உள்ளன. இதனால், தமிழக சினிமா உலகம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது.

பிரச்னை தோன்றும் போதுதான் புதிய பாதைக்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதைப்போல, இணையதளத்தில் புதிய படங்களை வெளியிடும் போக்கு ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இணைய தளத்தில் வெளியானது. அடுத்து நடிகர் சூர்யாவின் சூரரைபோற்று படமும் இணையத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் திரையரங்குகளை திரக்க அனுமதி கோரி அதன் உரிமையாளர்கள், பிரபலங்கள் என பலரும் கொரிக்கை முன்வைத்தனர். இந்த சூழலில், 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கொண்டு திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் 8 ஆம் தேதி, தியேட்டர் உரிமையாளர்களுடன் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு 8ம் தேதி ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0